'சோபா'வில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சாவு


சோபாவில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சாவு
x

‘சோபா’வில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை இறந்தது.

திருச்சி

உப்பிலியபுரம்:

பெண் குழந்தை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் ஊராட்சி அரிஜன தெருவை சேர்ந்தவர் சங்கர். டிரைவர். இவருக்கு திருமணமாகி, 9 மாதத்தில் ரிதனா என்ற பெண் குழந்தை இருந்தது.

கடந்த வாரம் வீட்டில் இருந்த 'சோபா'வில் ரிதனாவை படுக்க வைத்திருந்தனர். அப்போது குழந்தை திடீரென உருண்டு 'சோபா'வில் இருந்து தரையில் விழுந்தது. இதையடுத்து உறவினர்கள் அந்த குழந்தையை மீட்டனர்.

சாவு

இந்நிலையில் 2 நாட்களுக்கு பின்னர் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரிதனாவை சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் ெபற்றோர் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிதனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சோபாவில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Related Tags :
Next Story