அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்-அவசர வழக்காக விசாரிக்க முறையீடு


அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்-அவசர வழக்காக விசாரிக்க முறையீடு
x
தினத்தந்தி 29 Aug 2023 5:39 AM GMT (Updated: 29 Aug 2023 7:05 AM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தது.

இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் , செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் கோர முடியாது என்றும், ஜாமீன் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story