பலூன் வெடித்து 2 மீனவர்கள் காயம்


பலூன் வெடித்து 2 மீனவர்கள் காயம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பலூன் வெடித்து 2 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் மராமத்து பணிக்காக கடற்கரையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகு ஒன்றை காற்று நிரப்பப்பட்ட பலூன் மூலம் கடலில் இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ராட்சத பலூன் திடீரென வெடித்தது. இதில் பாம்பனை சேர்ந்த மீனவர் நேவிஸ், சண்முகநாதன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மண்டபம் கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story