திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் அதிகாரிகளுக்கு கறி விருந்து


திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் அதிகாரிகளுக்கு கறி விருந்து
x

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர்

திருத்தணி:

திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகேயன் இல்லத்தில் குடிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் முருகன் கோவில் தொடர்புடைய வீடியோ ஒன்று வைரலாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் அரக்கோணம் சாலையில் உள்ள கார்த்திகேயன் குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் கலைவாணன், வித்தியாசாகர் ஆகிய இருவருக்கும் சிக்கன், மட்டன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை கோவில் ஊழியர்களே பரிமாறுகின்றனர். சூப்பிரண்டுகள் இருவரும் ருசித்து சாப்பிடுகின்றனர்.

இந்த வீடியோ வைரலாக தற்போது திருத்தணியில் பரவி வருகிறது. வீடியோவை கண்ட முருக பக்தர்கள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில் சூப்பிரண்டுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் தங்குகின்ற அறைக்கு சைவத்தைத் தவிர மற்ற உணவுகளுக்கு அனுமதி கிடையாது என தெரிந்தும் விதிகளை மீறிய ஊழியர்கள் மீது இந்து அறநிலைத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .


Next Story