கரடி தாக்கி தொழிலாளி காயம்
கரடி தாக்கி தொழிலாளி காயம்
ஈரோடு
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே உள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன் (வயது 45). தொழிலாளி. இவர் நேற்று வனப்பகுதியையொட்டி மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று வெளியேறியது. பின்னர் திடீரென அந்த கரடி திம்மையனை தாக்க தொடங்கியது. இதனால் அவர் சத்தம் போட்டு கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கரடியை விரட்டி திம்மையனை மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட திம்மையனை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கேர்மாளம வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story