விநாயகர் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்கரணம்


விநாயகர் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்கரணம்
x

விநாயகர் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்கரணம் போட்டனர்.

திருச்சி

மலைக்கோட்டை:

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. காவிரியில் மாதா மாதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். விவசாயிகளின் உரிமைக்காக டெல்லி சென்று போராட தமிழக முதல்-அமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. 47-வது நாளான நேற்று தமிழகத்துக்கு காவிரி நீர் தராத கர்நாடக முதல்-மந்திரியை கண்டித்து விநாயகர் சிலை முன்பு விவசாயிகள் தோப்பு கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, விவசாயிகளின் பிரச்சினைகளை விநாயகர் தான் தீர்த்து வைத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விநாயகர் சிலை முன்பு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினோம். விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. ஆகையால் காவிரியில் இருந்து உரிய தண்ணீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தர அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story