மதுரை-தூத்துக்குடி இடையே இருவழி ரெயில்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி


மதுரை-தூத்துக்குடி இடையே இருவழி ரெயில்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

மதுரை-தூத்துக்குடி இடையே இருவழி ரெயில்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

மதுரை-தூத்துக்குடி இடையே இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த ரெயில்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக கோவில்பட்டி தாலுகாவிலுள்ள கோவில்பட்டி நகரம், இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி மற்றும் மந்தித்தோப்பு ஆகிய பகுதிகளில் ரெயில்பாதை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து, கோவில்பட்டி தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

1 More update

Next Story