பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் இன்றும் ஒத்திவைப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் இன்றும் ஒத்திவைப்பு
Published on

மணிகண்டம்:

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நேற்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எல்.கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் (தன்னாட்சி அல்லாத) முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் படி, மாண்டஸ் புயல் மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற (தன்னாட்சி அல்லாத) கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ தேர்வுகளுக்குரிய எழுத்து தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com