பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி


பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
x

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

104 அடியை எட்டியது

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 104 அடியை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 1,283 கன அடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டாக அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story