நீர் பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர் பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர் பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு

பவானிசாகர்

நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் வழியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழைபெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 492 கன அடியாக தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.71 அடியாக இருந்தது.

நேற்று மாலை 4 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 436 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.4 அடியாக உயர்ந்தது. அணையின் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


1 More update

Next Story