சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை


சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் ஊராட்சி பூனையானூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் மயானத்திற்கு சிமெண்டு சாலை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிதேவன், சுரேஷ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பெரியக்கண்ணு, மணி, தங்கராஜ், மகேந்திரன், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story