சேலத்தில்அண்ணா சைக்கிள் போட்டி; 600 மாணவ, மாணவிகள் பங்கேற்புகலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

சேலத்தில்அண்ணா சைக்கிள் போட்டி; 600 மாணவ, மாணவிகள் பங்கேற்புகலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
x

சேலத்தில் நடைபெற்ற அண்ணா சைக்கிள் போட்டியை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சேலம்

சேலம்

சேலத்தில் நடைபெற்ற அண்ணா சைக்கிள் போட்டியை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அண்ணா சைக்கிள் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயானஅண்ணா சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 13, 15, 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு என 15 கிலோ மீட்டர் முதல் 20 கிலோ மீட்டர் தூரம் கடக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர். மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய போட்டி வயதுக்கேற்ப கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ், ஏற்காடு அடிவாரம் சென்று மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பரிசு

போட்டியில் வெற்றிபெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக 2 ஆயிரமும் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ.250- பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட சைக்கிள் சங்க தலைவர் நாசர்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story