பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி


பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டர் தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் தொலைவும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் தொலைவும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தொலைவும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் மற்றும் மாணவிகளுக்கு 15 கி.மீ தொலைவும் போட்டி நடத்தப்பட்டது.

பரிசு விவரம்

நாமக்கல் கலெக்டர்அலுவலகம் முன்பு இருந்து இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசு காசோலையும் மற்றும் முதல் 10 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழும் இன்று (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story