சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி

சோழவரம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.
சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலி
Published on

தூசி

சோழவரம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து பீகார் மாநில தொழிலாளி பலியானார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது லத்தீப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவர் உள்பட வடமாநிலங்களை சேர்ந்த 10 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று பழைய கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் முகமது லத்தீப் சிக்கிக்கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பரிசோதித்தபோது முகமதுலத்தீப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com