கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதல்; கும்பல் விரட்டியதில் கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

சங்கரன்கோவில் அருகே கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது கும்பல் விரட்டியதில் கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதல்; கும்பல் விரட்டியதில் கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது கும்பல் விரட்டியதில் கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கோவில் கொடை விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப் (வயது 20), இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ. படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவுக்கு நண்பர்களுடன் சென்றார். அப்போது அங்கு வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானது.

கிணற்றில் விழுந்து சாவு

இதில் தகராறு முற்றவே இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் விரட்டியதில் மாணவர் பிரதீப் தப்பி ஓடினார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் பிரதீப் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் குவிப்பு

இதற்கிடையே, மாணவர் சாவுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை விரட்டியது தொடர்பாக ஒரு போலீஸ்காரர் உள்ளிட்ட சிலர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com