முதல் நாளே மூடப்பட்ட பிரியாணி கடை - சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு.. வேலூர் ஆட்சியர் விளக்கம்


முதல் நாளே மூடப்பட்ட பிரியாணி கடை - சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு.. வேலூர் ஆட்சியர் விளக்கம்
x

தொடங்கப்பட்ட முதல் நாளே பிரியாணி கடை மூடப்பட்டது குறித்து வேலூர் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிரியாணி கடை மூடப்பட்ட விவகாரத்தில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,'வெயிலின் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்புகள் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும் பொழுது அதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னர் உணவகத்தை திறக்கும் படியும் அறிவுரை கூறப்பட்டதாக ஆட்சியர் குமரவேல் கூறியுள்ளார்.

பின்னர் தனியார் உணவக நிர்வாகம் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக அளித்த கடிதத்தின் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே உணவகம் திறக்கப்பட்டது என்றும் ஆட்சியர் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story