பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
கரூர் வெண்ணைமலையில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான முன்னாள் எம்.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, லாட்டரி உள்பட குற்ற செயல்கள் அதிகரித்து வருவதை கரூர் மாவட்ட போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக செயல்படும் தேங்காய் சிரட்டை கறி உற்பத்தி நிலையங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர்-பெரம்பலூர் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற அனைவரும் பாடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






