பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. புகார்


பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி 31-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான முகமது ஜகாங்கீர், நகர்மன்ற தலைவர் கார்மேகத்துடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் குமார், மதபிரச்சினையை தூண்டும் வகையில் பேசினார். கடந்த வாரம் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் இதே பிரச்சினையை எழுப்பி தி.மு.க. கவுன்சிலர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இதனை தட்டிக்கேட்டதற்காக என்னை அச்சுறுத்தும் வகையில் பேசி மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பா.ஜ.க. கவுன்சிலர் குமார் மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், தி.மு.க. கவுன்சிலர்கள் மீது புகார் கொடுத்த நிலையில் தி.மு.க. தரப்பிலும் பா.ஜ.க. மீது புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story