ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்


ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்
x

ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தி.மு.க.வினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் வெளியிடுவேன் என்று பரபரப்பாக பேட்டி அளித்தார். இந்த நிலையில், ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்,

இது தொடர்பாக கூறியதாவது: "பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பாஜகவுக்கு ஊழலைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய நிதி நிறுவன மோசடியில் பங்கு உண்டு. கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழலுக்குப் பேர் போன பாஜகவுக்கு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைப் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை" என்றார்.

1 More update

Next Story