பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்
அ.தி.மு.க-வில் விழுப்புரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த முரளி நீக்கப்பட்டு உள்ளார்.
சென்னை
அ.தி.மு.க-வின் கொள்கை குறிக்கோளுக்கு முரணாகச் செயல்பட்டதாக, அ.தி.மு.க-வில் விழுப்புரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த முரளி என்ற ரகுராமன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையேற்று நடத்திவைத்த திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகனுடன் இணைந்து செய்து, அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதால் முரளியை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது அ.தி.மு.க தலைமை.
Related Tags :
Next Story