கார் டயர் வெடித்து பாய்லர் ஆலை ஊழியர் படுகாயம்

கார் டயர் வெடித்து பாய்லர் ஆலை ஊழியர் படுகாயமடைந்தார்.
கார் டயர் வெடித்து பாய்லர் ஆலை ஊழியர் படுகாயம்
Published on

உப்பிலியபுரம்:

திருச்சிய அடுத்த திருவெறும்பூரில் உள்ள பாய்லர் ஆலை நிறுவனத்தில் பணிபுரிபவர் வேல்முருகன்(வயது 40). இவர் நேற்று செந்தாரப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக தனது மனைவி மணிமேகலை(35), மகன் கோகுல்(12), மகள் மகிழ்மதி(7) ஆகியோருடன் காரில் சென்றார். கொப்பம்பட்டியை அடுத்துள்ள ராஜபாளையம் அருகே சென்றபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி கவிழ்ந்த கார் உருண்டு சாலையோரத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது. இதில் படுகாயமடைந்து, சுயநினைவிழந்திருந்த வேல்முருகனையும், காயமடைந்த மற்ற 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மற்றொரு கார் மூலம், சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com