வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
Published on

சிதம்பரம்

சிதம்பரம் வேங்கன் தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி(வயது 55). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது டி.வி., மின்சார அடுப்பு, செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com