புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விளக்க கூட்டம்


புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விளக்க கூட்டம்
x

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது சம்பந்தமாக தலைமை ஆசிரியர்களுக்கான விளக்க கூட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட 1,330 பேருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்கள் அடிப்படை கல்வி வழங்கும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தை வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர் விளக்கி கூறினார். இத்திட்டத்தை செயல்படுத்த, கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கணக்கெடுக்கும் பணி ஜூலை 3-வது வாரம் வரை நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட உள்ளனர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story