பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா

பி.எஸ்.என்.எல்.
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
2017-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு பென்சன் மாற்றம் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட டி.ஏ. நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவப்படியை வழங்க வேண்டும். எல்.பி.டி. ஊதியத்தில் பாதிக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, மணியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள






