கட்டிட பராமரிப்பு பணி:படிக்கட்டு சரிந்து விழுந்து தொழிலாளி பலி


கட்டிட பராமரிப்பு பணி:படிக்கட்டு சரிந்து விழுந்து தொழிலாளி பலி
x

கட்டிட பராமரிப்பு பணியின்போது படிக்கட்டு சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்

மதுரை


மதுரை நேதாஜி ரோடு முருகன் கோவில் அருகே மருந்து கடை ஒன்று உள்ளது. அங்கு கட்டிட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று மாலை அங்குள்ள படிக்கட்டை இடிக்கும் பணியில் அச்சம்பத்து அருகே உள்ள புதுக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பையா (வயது 55) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டு சரிந்து அவர் மேல் விழுந்ததில் தலையில் அடிபட்டு கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து தெற்கு வாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story