மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே வேள்வரை ஒத்தக்கடையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயம் வேள்வரை ஒத்தக்கடையில் இருந்து ஆவுடையார்கோவில் சாலையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 45 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, புது பூட்டு ஆகிய பிரிவுகளில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டிகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

பரிசு

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாட்டின் உரிமையாளர் களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஒத்தக்கடை-ஆவுடையார்கோவில் சாலையின் இருபுறமும் திரளான ெபாதுமக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு களித்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை மீமிசல் போலீசார் செய்திருந்தனர்.


Next Story