தொழிலதிபர்கள் கலந்தாய்வு கூட்டம்


தொழிலதிபர்கள் கலந்தாய்வு கூட்டம்
x

தொழிலதிபர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் யங் இந்தியன்ஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சகம் சார்பில் ஒய் 20 என்ற சாதனை தொழிலதிபர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனை தொழிலதிபர் காளீஸ்வரி ஏ.பி.செல்வராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி கற்கவும், பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் போது மாற்று மொழி தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். அதனால் மாணவர்கள் பள்ளி கல்வியின் போதே இந்தி உள்ளிட்ட மாற்று மொழிகளை கற்க ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட வெளி நாடுகள் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் தொழில் செய்து வருகிறது. அந்த நாட்டின் மொழி தெரிந்த இந்தியர்களை பணியில் அமர்த்தி கொள்ள விரும்புகிறது. ஆனால் நமது மாணவர்கள் ஆங்கிலத்தை தவிர வேறு எந்த வெளிநாட்டு மொழிகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இளைஞர்களுக்கு நல்ல பணி வாய்ப்புகள் மங்கி போகிறது. இதை தவிர்க்க வெளிநாட்டு மொழிகளையும் கற்ற வேண்டும். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது. அதனால் இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் உழைக்க முன் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்தியாவில் ஒரு வலுவான வணிக சூழலை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொழிலதிபர்கள் இதயம் முத்து, பென்டகன் ஜவகர், சபிதா, பாரி ராஜன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யங் இந்தியன்ஸ் அமைப்பின் சிவகாசி நிர்வாகிகள் தினேஷ்அகர்வால், சண்முகநடராஜ் மற்றும் காளீஸ்வரி கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story