அழகியபுதூரில்சிறப்பு கால்நடை முகாம்மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


அழகியபுதூரில்சிறப்பு கால்நடை முகாம்மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

அழகியபுதூரில் நடந்த சிறப்பு கால்நடை முகாமை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி அழகியபுதூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்புகள் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம், மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 200 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதில் முதல் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தற்போது நடத்தப்பட்டது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன என்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் அருள்ராஜ், கால்நடை உதவி மருத்துவர்கள் சிவசங்கர், தினேஷ், பிரேம்குமார், ரோஜா, புவனேஸ்வரி, கால்நடை ஆய்வாளர்கள் சின்னசாமி, பரத், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story