பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்


பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமை போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமை போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் வகையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்த முகாமை போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்டம் முழுவதிலும் குற்றவியல் வழக்கு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்களை பகுதிகள் வாரியாக போலீசார் பெற்றுக்கொண்டனர். இதில், பணம் மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி உள்பட 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

15 வழக்குகள் பதிவு

இந்த மனுக்கள் மீது பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 15 வழக்குகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன. மற்ற வழக்குகளுக்கு கூடுதல் ஆவணம் பெறப்பட்டு வழக்கு பதியப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழரசி, மனோகரன், சரவணன், முரளி, அமலா அட்வின் மற்றும் போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.


Next Story