கால்வாய் தூர்வாரும் பணி


கால்வாய் தூர்வாரும் பணி
x

நெல்லை கால்வாய் தூர்வாரும் பணி மேயர் பி.எம்.சரவணன்தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்து விடுவதை தடுக்க ரூ.68 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் நெல்லை கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது. சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து இந்த கால்வாய் தூர்வாரும் சிறப்பு பணி நடைபெறுகிறது. இந்த பணியை நேற்று நெல்லை டவுனில் மேயர் பி.எம்.சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story