மாணவர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரிப்பு


மாணவர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2023 1:15 AM IST (Updated: 5 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மாணவர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் புகார் கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவர் அஜித் இளங்கோ தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் கணபதி ரங்கன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் அவர்கள் 2 மனுக்கள் கொடுத்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடமும் மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுக்களில், 'அண்டை மாநிலமான கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்காக போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. கஞ்சாவை பள்ளி, கல்லூரிகளிலும் பயன்படுத்துவதாக தகவல் வருகிறது. இரவு நேரங்களில் நகரங்கள், கிராமங்களின் அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு சென்று கஞ்சா பயன்படுத்துகின்றனர். இதனால் மாவட்டத்தில் சமுதாய சீர்கேடு ஏற்படும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. எனவே, தனிக்கவனம் செலுத்தி கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story