தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு குளத்தில் பாய்ந்த கார்
முத்துப்பேட்டையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு குளத்தில் கார் பாய்ந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முத்துப்பேட்டையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு குளத்தில் கார் பாய்ந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குளத்தில் பாய்ந்த கார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து சம்பவத்தன்று இரவு 10.30 மணி அளவில் இளைஞர்கள் சிலர் காரில் பங்களா வாசல் வழியாக பட்டுக்கோட்டைக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது காரை ஓட்டியவர் நண்பர்களுடன் இருந்த உற்சாகத்தில் சாகசம் செய்வதாக நினைத்து காரை, அங்கும் இங்கும் திருப்பி உள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் இருந்த செக்கடிகுளம் படித்துறை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு குளத்துக்குள் பாய்ந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக கார், குளத்தின் படித்துறை தளத்தில் திரும்பி நின்றதால் குளத்தில் இருந்த தண்ணீரில் விழவில்லை.
வீடியோ பரவியது
இதனால் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பாதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.