அரூர் அருகே தீப்பிடித்து கார் சேதம்
தர்மபுரி
அரூர்:
சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). டிரைவரான இவர், தனது காரில் ஏற்காட்டை சேர்ந்த 5 பேரை அழைத்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூருக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர்கள் சேலம் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். அரூர் அருகே கீழனூர் பகுதியில் நேற்று முன்தினம் வந்தபோது அந்த காரின் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் குணசேகரன் காரை நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் அதிலிருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. கார் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story