பள்ளிபாளையத்தில் வாடகைக்கு ஓட்டிய சொந்த கார் பறிமுதல்

பள்ளிபாளையத்தில் வாடகைக்கு ஓட்டிய சொந்த கார் பறிமுதல்
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி உத்தரவின்பேரில் போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது வெப்படையில் இருந்து வந்த காரை அவர்கள் நிறுத்தினர். அந்த காரை முருகன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது சொந்த காரை வாடகைக்கு ஓட்டி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சொந்த காரை வாடகைக்கு ஓட்டியதாக காரை பறிமுதல் செய்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com