மாணவிகளிடம் சில்மிஷம்; ஆசிரியர் மீது வழக்கு

தர்மபுரியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் பன்னீர்செல்வம் (வயது 59) மாணவியின் கையெழுத்து சரியில்லை என்று கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல் மாணவிகளின் கன்னத்தில் கிள்ளுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார், ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






