காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது வழக்கு
திண்டுக்கல்லில், மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ததோடு, தண்டனையை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மறியலில் ஈடுபட்டது தொடர்பாக துரை மணிகண்டன் உள்பட 45 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story