மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விற்பனை பிரதிநிதி மீது வழக்கு

கோவையில் திருமணம் முடிந்த 8 மாதத்தில் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விற்பனை பிரதிநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விற்பனை பிரதிநிதி மீது வழக்கு
Published on

கோவையில் திருமணம் முடிந்த 8 மாதத்தில் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விற்பனை பிரதிநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மனைவிக்கு செக்ஸ் தொல்லை

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 25 வயதான விற்பனை பிரதிநிதிக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 23 வயதான எம்.இ. பட்டதாரி இளம்பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி திருமணம் முடிந்தது. பின்னர் 2 பேரும் தனியாக வசித்து வந்தனர்.

அப்போது கணவன், தனது மனைவியுடன் விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த இளம்பெண் பலமுறை தனது கணவருடன் எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி, தனது மனைவியிடம் கொடூரமாக செக்ஸ் உறவு வைத்ததும் தெரியவந்தது. இதனால் அந்த இளம்பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

கணவர் மீது வழக்கு

இருந்தபோதிலும் விற்பனை பிரதிநிதியின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த அந்த இளம்பெண் கோவை கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனக்கு திருமணம் முடிந்து எட்டு மாதம் ஆகிறது. தனதுகணவர் தன்னிடம் தனது விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், தனது மாமனார், மாமியார், கணவரின் அண்ணன், அண்ணி ஆகியோர் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார், அந்த விற்பனை பிரதிநிதி மீது மனைவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாகவும், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com