ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதியினர் மீது வழக்கு


ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதியினர் மீது வழக்கு
x

ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதியினர் மீது வழக்கு

நாகப்பட்டினம்

நாகை அருகே ஒரத்தூரை சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி வித்யா. இவர்கள் 2 பேரும் சேர்ந்து தனியார் மகளிர் குழுக்களை நடத்தி வந்தனர். இதில் ஒரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் சேர்ந்து கடன் பெற்றிருந்தனர். பெற்ற கடனை தவணைகளாக வித்யா, காந்தியிடம் திரும்ப கட்டியுள்ளனர். அந்த தவணை பணத்தை வித்யா, காந்தி ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்திடம் கட்டாமல் ரூ.1 ½ கோடி வரை மோசடி செய்ததாக ஒரத்தூரை சேர்ந்த சரஸ்வதி (வயது 53) என்பவர் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வித்யா, காந்தி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story