தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீது வழக்கு..!


தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீது வழக்கு..!
x

தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் ஜி.விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 12 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக விஜயராகவன் இருந்த போது அதிமுக ஆட்சியில் 2014-ம் ஆண்டு ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த ஓலைச் சுவடி பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம், இத்துறைக்கு தொடர்பே இல்லாதது; ஒப்பந்தம் கோரப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்னர்தான் பதிவு செய்யப்பட்டது என்கிற சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜி.விஜயராகவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story