செம்மாண்டகுப்பம் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்


செம்மாண்டகுப்பம் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 10:34 AM IST)
t-max-icont-min-icon

செம்மாண்டகுப்பம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.dh

தர்மபுரி

சாதி சான்றிதழ்

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கும் விழா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசால் நரிக்குறவர், குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து தற்போது பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்று வழங்குவதால் ஏராளமான சலுகைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரூர் தாலுகா அலுவலகத்தில் 133 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கும், தா்மபுரி தாலுகா அலுவலகம் சார்பில் 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதேபோன்று தர்மபுரி, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை தாசில்தார்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவர் சாதி சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதி சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த நலத்திட்டங்களை இந்த சமுதாய மக்கள் முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்

இவ்வாறு கலெக்டர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி உதவி கலெக்டர் கீதா ராணி, தாசில்தார் ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story