காவேரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தென்னமநாடு காவேரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
காவேரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

ஒரத்தநாடு:

தென்னமநாடு காவேரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கோவில் திருவிழா

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற காவேரி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அபிஷேக ஆராதனை செய்தும் அம்மனை வழிபட்டனர்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com