கரைபுரண்டு ஓடும் காவிரி: முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்


கரைபுரண்டு ஓடும் காவிரி: முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
x

திருச்சியில் உள்ள முக்கொம்பு காவிரி ஆற்றில் வரகூடிய தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகிறது.

திருச்சி:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணா சாகர் அணைகள் முழு கொள்ளளவு எட்டியது.

இதனால் அணைக்கு வரக்கூடிய உபநீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு வெகு விரைவில் எட்டியது. மேட்டூர் அணைக்கு வரக்கூடிய உபரி நீர் அணைத்தும். காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு சேலம் நாமக்கல் ஈரோடு கரூர் திருச்சி போன்ற மாவட்ட பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பாலத்தின் மேல் பகுதியில் நின்று கொண்டு கண்டு ரசித்தனர். மேலும் தண்ணீர் அதிக அளவு வெளியேறுவதால் பொதுப்பணித்துறை மற்றும் ஜீயபுரம் போலீசாரின் மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டது. அதையும் மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

இந்நிலையில் நண்பகல் நேரத்திற்கு பிறகு காவிரி ஆற்றில் வரக்கூடிய தண்ணீரி்ன் அளவும் அதிகமாக இருந்தது இன்று மாலை 4 மணிநிலவரப்படி காவிரியில் 69 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


Next Story