ஆதிவாசி முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
தேர்தலில் தவறாமல் வாக்களித்த ஆதிவாசி முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே கூவமூலா, ரிச்மென்ட், அய்யன்கொல்லி, சேரம்பாடி, எருமாடு, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஆதிவாசி காலனிகளில் முதியோர் தினத்தையொட்டி 80 வயது, 100 வயதை கடந்தும் ேதர்தலில் தவறாமல் வாக்களித்து வரும் முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பந்தலூர் தாசில்தார் நடேசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் தேவராஜ், விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் கர்ணன், அசோக்குமார், மாரிமுத்து ஆகியோர் ேதர்தலில் தவறாமல் வாக்களித்த ஆதிவாசி முதியோர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மேலும் முதியோர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story