தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!
x
தினத்தந்தி 21 Jan 2023 7:16 AM GMT (Updated: 21 Jan 2023 7:54 AM GMT)

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்புள்ளது.

மேலும், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 23 முதல் 25-ம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story