மகாமாரியம்மன் கோவிலில் சண்டி யாகம்
மகாமாரியம்மன் கோவிலில் சண்டி யாகம் நடைபெற்றது.
திருச்சி
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மேலும் விவசாயம் செழிக்க வேண்டி மகா சண்டியாகம் நடந்தது. யாக குண்டலத்தில் பலவிதமான பழங்கள் மற்றும் திரவியங்கள், பல வண்ண பூக்கள் இடப்பட்டன. யாகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மகாமாரியம்மனுக்கு மாவிளக்கு மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story