செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோட்டம்


செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோட்டம்
x

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோடினர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய 5 சிறுவர்களை தடுக்க முயன்ற ஆசிரியர்கள் குணசேகரன், பாபு ஆகியோரை செங்கலால் தாக்கிவிட்டு சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

செங்கலால் தாக்கி படுகாயமடைந்த இரு ஆசிரியர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story