மதுராந்தக நெல் கொள்முதல் நிலையத்த்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு


மதுராந்தக நெல் கொள்முதல் நிலையத்த்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

மதுராந்தகத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குப்பகுதிகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகத்தில் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில் மதுராந்தகத்தில் உள்ள சூரை கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல்சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், அறுவடை செய்து வைக்கப்பட்டுள்ள நெல் பாதுகாப்பான முறையில் அரசுக்கு கொள்முதல் செய்யப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.


Next Story