தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு


தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கப்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை போன்ற ஊராட்சி பகுதிகளில் தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தவர்களிடம் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு போன்றவற்றை வாங்கி சோதனை செய்தார். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு? அவர்களுக்கு சொந்த நிலம் உள்ளதா? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? சொந்தமாக கார், டிராக்டர் உள்ளிட்ட ஏதேனும் வாகனம் உள்ளதா? என்று கேட்டரிந்தார் இந்த ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, அரசு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story