செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா


செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.

செங்கல்பட்டு

வீட்டுமனை பட்டா

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 229 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, வீட்டுமனை பட்டா கோரி மனுக்களை வழங்கிய 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர் வளாகத்திலும், தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மதுராந்தகம் கோட்டாட்சியர் தலைமையில் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 10.மணி முதல் 1.மணி வரை நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story