ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்


ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுவை  நாளை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்
x

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் தீர்மானங்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.

சென்னை,

சென்னை, அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில், இடைக்கால மனுக்களை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு தடை கேட்ட மனுவையும் நிராகரித்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனார்.இதற்கிடையே தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட பெஞ்சில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீட்டு மனு மட்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதால் என்று மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரின் மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்ற ஓபிஎஸ் உள்ளிட்டோர் மனுக்களை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நிதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story